தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு!
Heavy
Rain
Tamilnadu
Days
Two
தமிழ்நாடு
மழை
By Thahir
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களான திருச்சி,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகை,மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி,கோவை,திருப்பூர்,உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் உருவாகும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.