உலகின் இள வயது செஸ் சாம்பியன் - சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்

M K Stalin Chess Tamil nadu Narendra Modi India
By Karthikraja Dec 12, 2024 03:32 PM GMT
Report

செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷ் உலகின் இள வயது செஸ் சாம்பியன் பெருமையை பெற்றுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதினார்.

gukesh chess

மொத்தம் 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் 3 வது மற்றும் 11 வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12 வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற சுற்றுகள் ‘டிரா’வில் முடிந்தது. 

செஸ் ஒலிம்பியாட் - முதல் முறையாக தங்கம் வென்று இந்தியா சாதனை

செஸ் ஒலிம்பியாட் - முதல் முறையாக தங்கம் வென்று இந்தியா சாதனை

குகேஷ் வெற்றி

இந்த பரபரப்பான நிலையில், இறுதி சுற்றான 14 வது சுற்று இன்று தொடங்கியது. கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பாக நடந்த இந்தச் சுற்றில் 58வது நகர்வில் குகேஷ் வெற்றிப் பெற்றார். வெற்றி பெற்ற உடன் உணர்ச்சிவசப்பட்ட குகேஷ் சிறுது நேரம் அழுதார். 

இது குறித்து பேசிய குகேஷ், "இந்த நாளுக்காக 10 ஆண்டுகளாக உழைத்தேன். 2 ஆண்டுகால தீவிர பயிற்சிக்கு பின்னர் இந்த வெற்றிக் கிடைத்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிடமிருந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பறிக்கப்பட்டது. என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை உரிதாக்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இள வயது சாம்பியன்

இந்த வெற்றி மூலம் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மிக இளம் வயது வீரர் எனும் சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியா சார்பில், தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது இந்தியா சார்பில் இரண்டாவதாக மற்றொரு தமிழக வீரர் வெற்றி பெற்றுள்ளார். 

குகேஷின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.