ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை - டிடிவி.தினகரன்
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு இருக்காது என மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனர்.
அதுமட்டுமில்லாமல் சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். தேர்தல் அறிக்கையில் கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு இருப்பதாகவும் மீண்டும் பொருளாதாரம் மேம்பட்டு சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என கூறியிருந்தார்கள்.
வரியை ஏற்ற வேண்டும் என்றால் மக்கள் தாங்க கூடிய அளவிற்கு 10 சதவீதம் ஏற்றியிருக்கலாம். அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலின அதிகாரியை தரக்குறைவாக பேசியதால் தகவல் வெளியானது.
அதை தொடர்ந்து தான் அவர் துறை மாற்றப்பட்டு அதுவும் பிற்படுதப்பட்டோர் துறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
ஆளுநர் அளித்த தேநீர் விருந்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பேசிய டிடிவி.தினகரன், பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று சொன்னார்கள்.
அவர்கள் வழி வந்தவர்கள் நாங்கள்,சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை உடனடியாக ஜனதிபதிக்கு அனுப்ப வேண்டியது அவருடைய கடமை என்று நினைக்கிறோம்.
ஆளுநர் மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசியிடம் இருந்து பெற்று தருவதற்கான செயல்களை செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,ஆளுநர் அளித்த விருந்தில் திமுக கலந்து கொள்ளாதது தவறில்லை என்று தான் நினைக்கிறேன் என்றார்.