ஒன்றிய அரசு என அரசியல் செய்வதும் தவறு தான் : ஆளுநர் ஆர்.என்.ரவி
DMK
R. N. Ravi
By Irumporai
ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை, ஆனால் அதை அரசியலாக்கும் போது தான் பிரச்னை ஆகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
ஆளுநர் சர்ச்சை
தமிழகம், தமிழ்நாடு, திராவிட அரசியல் வார்த்தை சர்சையிலும் , தமிழக சட்டப்பேரவைய்ல் வெளிநடப்பு செய்தது என பல விமர்சனங்களை சந்தித்து வருகின்றார் ஆளுநர்.
ஒன்றிய அரசில் தவறிலில்லை
இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்னை ஆகிறது.
ஒன்றிய அரசு என அழைத்து அவமதிக்கும் போது தான் அது பிரச்னையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு என்ற பிரச்னை பற்றி தமிழ்நாட்டை தாண்டி யாருக்கும் தெரியாது எனக் கூறினார்.