தமிழகம் வெற்றி நடை போடுகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு

kamal ops stalin eps
By Jon Feb 02, 2021 12:36 PM GMT
Report

தமிழக அரசு சிறப்பான செயல்பாடுகளால் விருதுகள் பெற்று வெற்றி நடை போடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.

அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்து சமூக நீதியை நிலை நாட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் “அம்மா மினி கிளினிக்” தொடங்கியதற்கு முதலமைச்சருக்கு சிறப்பு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.

தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து நிர்வாக திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று வெற்றி நடை போடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாராம் சூட்டினார்.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் சிறப்பாக செயல்படும் அனைத்து துறைகளுக்கும் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.