நிதி நிலை அறிக்கைக்கு பிறகு தமிழக அரசு ஜெட் வேகத்தில் பயணிக்கும்- அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு!
நிதி நிலை அறிக்கைக்கு பிறகு தமிழக அரசு ஜெட் வேகத்தில் பயணிக்கும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு தமிழர் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், நிதி நிலை அறிக்கைக்கு பிறகு தமிழக அரசு ஜெட் வேகத்தில் பயணிக்கும்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு நிதிகளின் மூலம் ஒன்றிய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்திற்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கல்வி மற்றும் வேளாண் துறைக்கு அதிக நிதியினை ஒதுக்கி தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக கூறியவர், தேர்தல் வாக்குறுதிப்படி மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பினை வழங்கிட முதல்வர் உறுதி செய்துள்ளதாக அமைச்சர். கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.