போக்குவரத்துக் கழகத்துக்கு ஓட்டுநர், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு!
Tamil nadu
Governor of Tamil Nadu
By Jiyath
812 காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.
அரசாணை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக இருக்கும் 812 பணியிடங்களில் ஓட்டுநர், நடத்துநர்களை பணியமர்த்த அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம்,சேலம்,நெல்லை, கோவை, மதுரை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்
கும்பகோணத்தில் 174 இடங்களிலும், சேலத்தில் 254, கோவையில் 60, மதுரை 136, திருநெல்வேலியில் 188 காலி பணியிடங்களில் பணியமர்த்த திட்டமிடப் பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.