YouTube சேனல் தொடங்க போறீங்களா..? தமிழக அரசின் பயிற்சி வகுப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!

Youtube Tamil nadu Governor of Tamil Nadu
By Jiyath Jan 21, 2024 07:15 AM GMT
Report

சொந்தமாக யூடியூப் சேனல் உருவாக்குதல், இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.  

பயிற்சி 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி சென்னையில் வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

YouTube சேனல் தொடங்க போறீங்களா..? தமிழக அரசின் பயிற்சி வகுப்பு - மிஸ் பண்ணிடாதீங்க! | Tamilnadu Government Training For Youtubers

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம். சமூக ஊடக சந்தைப்படுத்தல். சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் 

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

YouTube சேனல் தொடங்க போறீங்களா..? தமிழக அரசின் பயிற்சி வகுப்பு - மிஸ் பண்ணிடாதீங்க! | Tamilnadu Government Training For Youtubers

மேலும் விவரங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 044-22252081, 22252082 என்ற தொலைபேசி எண்ணிலும் 8668102600, 86681 00181, 7010143022 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் எனவும், பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்" எனவும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.