விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்..! 150 விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் தமிழக அரசு
M K Stalin
Government of Tamil Nadu
Malaysia
Thailand
Philippines
By Thahir
உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை வெளிநாடு அழைத்து செல்ல 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் தமிழக அரசு
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகைள வெளியிட்டார்.
அதில் விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வண்ணம், விவசாயிகளை வெளிநாடு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் என அறிவித்துள்ளார்.