தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Corona Tamil Nadu Stalin Vaccine Production
By mohanelango May 18, 2021 06:40 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தின் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு இடங்களிலிருந்து ஆக்சிஜன், சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசு வழங்குகிற தடுப்பூசி போதாததால் உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் ஆக்ஸிஜன், தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே தயாரிக்க உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற் கூட்டு நிறுவனங்கள் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை.

தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் | Tamilnadu Government To Produce Vaccines Stalin

தமிழகத்தின் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகத்திலேயே அதன் உற்பத்தியை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அது தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துக்களை கோரியுள்ளது. தமிழகத்தின் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்றவாறு தன்னிறைவை அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.