தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: அரசு அறிவிப்பு
School
Students
All Pass
By mohanelango
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மூன்றாம் அலை அச்சம் இருப்பதால் பள்ளிகளை தற்போதைக்கு திறப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவதாக தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.