4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

today leave Information stalin government offices
By Nandhini Dec 31, 2021 03:39 AM GMT
Report

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று 10 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசிய தேவை சார்ந்த அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும்.மேலும், சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இந்த 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.