தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: சிவகார்த்திகேயனுக்கு விருது
கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில்கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் 2019 - 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் சினிமாவில் மகத்தான பங்களிப்பை அளித்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ஆகியோருக்கும், இசையமைப்பாளர் டி.இமானுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்கள் நாளை மாலை தலைமைச் செயலகம் வர அழைக்கப்பட்டுள்ளனர்.