உலகப் புகழ்பெற்ற மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு அனுமதி
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 24-ந்தேதி நடைபெறும் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவில் 22-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 23-ந்தேதிதிக்கு விஜயமும், 24-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 25-ந்தேதி தேர் திருவிழாவும் நடைபெறும்.
கடந்தாண்டை போன்றே இந்தாண்டும் சித்திரை திருவிழா நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது, இதனால் பக்தர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் 24ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் திருக்கல்யான நிகழ்வை காணலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.