ரேசன் கார்டு வைத்திருக்கும் உங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு - மறந்துவிடாதீர்கள்

Government of Tamil Nadu Chennai
By Thahir Mar 13, 2023 06:52 AM GMT
Report
205 Shares

தமிழ்நாட்டில் பெரும்பாலனோர் தங்கள் ரேசன் கார்டில் மாற்றம் செய்ய வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு அழைந்து வந்த நிலையில் அரசு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறைதீர் முகாம் 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மார்ச் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.03.2023 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

Tamil Nadu government appeal to ration card holders

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கோரிக்கை 

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ரேசன் கார்டு அட்டை வைத்துக் கொண்டு மாற்றம் செய்ய நினைத்த பொதுமக்கள் தற்போது இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.