தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு - ரூ.1,000 ரொக்கம் கிடைக்குமா..?
2024ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் "2024 தைப்பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசாணை
இதற்காக ரூ. 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவலும் இல்லை.