எகிறும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்
தங்கத்தின் மீதான முதலீடுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்துக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக, கணிசமாக குறைந்த தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்துக் கொண்டிருக்கிறது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.464 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,505க்கும், ஒரு சவரன் ரூ.36,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 அதிகரித்து ரூ.4,541க்கு விற்பனை செய்யப்பட்டத. அதன் படி, சவரனுக்கு ரூ.288 அதிகரித்து ரூ.36,328க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700க்கும் விற்பனையாகிறது.