தயாளு அம்மாள் திடீரென மருத்துவமனையில் அனுமதி - வெளியான முக்கிய தகவல்
hospital
tamilnadu
admit
கருணாநிதி
former-chief-minister
Dayalu Ammal
தயாளு அம்மாள்
மருத்துவமனையில் அனுமதி
m-karunanidhi-wife
மனைவி
By Nandhini
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று குடும்பத்தார் கோபாலபுரம் வீட்டிலிருந்து தாயாளு அம்மாளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றும், இன்று மாலை 6 மணி அல்லது இரவு 7 மணிக்குள் வீடு திரும்பி விடுவார் என்று மருத்துவமனையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் மு.க அழகிரி, செல்வி, தமிழரசு ஆகியோர் தாயாளு அம்மாளுடன் உள்ளனர்.