வானிலை மோசமடைந்ததால் சென்னையில் 14 விமானங்களின் சேவை

tamilnadu-flight
By Nandhini Nov 11, 2021 04:08 AM GMT
Report

ரத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழையானது தற்போது வரை நீடித்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்க இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு-

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் நேற்று மாலை விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மாலை 4.10 மணிக்கு மதுரைக்கு 40 பயணிகளுடன் சென்ற விமானம், இரவு 7.55 மணிக்கு திருச்சிக்கு 41 பயணிகளுடன் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

அத்துடன் இரவு 7.30 மணிக்கு மதுரையிலிருந்து 74 பயணிகளுடன், இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து 34 பயணிகளுடன் வரவேண்டிய 2 விமானம் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட 14 விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. சார்ஜாவில் இருந்து நேற்றிரவு 8.55 மணிக்கு 154 பயணிகளுடன் சென்னை வர வேண்டிய ஏர்அரேபியா விமானம் மற்றும் இரவு 9.35 மணிக்கு 127 பயணிகளுடன் புறப்பட்டு செல்ல வேண்டிய அதே விமானமும், மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அத்துடன் 2:15 மணிக்கு துபாயில் இருந்து வந்து விட்டு 3:20 க்கு செல்ல வேண்டிய விமானம், சார்ஜாவில் இருந்து அதிகாலை 3 மணிக்கு வந்து விட்டு 4 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், காலை 8 மணிக்கு வந்து காலை 10 மணிக்கு புறப்பட இருந்த துபாய் விமானம் ஆகிய 14 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

துபாயிலிருந்து சென்னைக்கு வந்து திரும்பி செல்ல வேண்டிய விமானம் லண்டனில் இருந்து வந்து செல்ல விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பக்ரைனில் இருந்து வர வேண்டிய விமானம் 12ம் தேதி காலை 5 மணிக்கு வந்து விட்டு, காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்றும் மழை பாதிப்பு அதிகமானால் மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் மழையினால் சிறிய ரக விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவற்றை ரத்து செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.