எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை

Srilanka Arrest Navy Fisherman Tamilnadu கைது இலங்கை மீனவர்கள்
By Thahir Apr 03, 2022 03:11 AM GMT
Report

இந்திய - இலங்கை கடல் எல்லை பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்படும் மீனவர்கள் விடுவிக்கபட்டாலும் அவர்களது விசைப்படகுகள் மட்டும் விடுவிக்கப்படுவதில்லை.

இதனால் தமிழக மீனவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த தொடர் சம்பவத்தால் மீனவர்கள் வாழ்வாதரம் இழந்து தவித்து வருகின்றனர்

இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.