புதிய அமைச்சர்களுடன் அமைச்சரவைக் கூட்டம் -முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu DMK
By Vidhya Senthil Oct 02, 2024 03:13 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in அரசியல்
Report

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியிடம் பரிந்துரை செய்தார் . இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அமைச்சரவை மாற்றத்திற்குக் கடந்த செப். 28-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

mkstalin

இந்த ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த செப்.29-ம் தேதி அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர். அந்த வகையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,

இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்களுக்கு ஆளுநர் ரவி பதவி பிராமணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும் புதியதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு, அதாவது வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை,கோவி. செழியன் - உயர் கல்வித்துறை, (தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்)

அமைச்சரவை

ஆர்.இராஜேந்திரன் - சுற்றுலா, சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடுத்துறைன், சா.மு.நாசர் - சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர் நலன், வஃக்ப் வாரியம் துறைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

cabinet meetin

இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8-ம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.