ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

tamilnadu-fire-shop
By Jon Jan 10, 2021 07:45 AM GMT
Report

சென்னை மேடவாக்கம் பகுதி ஹார்டுவேர்ஸ் கடையில் நள்ளிரவில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமுற்றது.

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.தொடர்ந்து மளமளவென்று கடை முழுவதும் தீ பரவியது.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 5 வாகனங்களிலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.