தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 இன்று தாக்கல் : என்னென்ன எதிர்பார்க்கலாம்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகச் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
நிதிநிலை அறிக்கை குறித்த புத்தகம் இல்லாமல் இ பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பின் அலுவல் ஆய்வுக்குழு கூடிப் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வரிகளை உயர்த்தாமல், வரி இழப்புகளை சமாளிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் வரி இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஜிஎஸ்டிக்குள் அடங்காத துறைகளில் வரி இழப்புகளை சமாளித்து முறைப்படுத்தினால் அது அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும். இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதி ஆகும்.
இது. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையை பெற பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட்டின் போதே அறிவித்து இருந்தார்.
இன்று மின்சார கட்டணத்தில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் கணக்கிடும் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது