யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும் - பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு
யார் வென்றாலும் பணநாயகம்தான் வென்றதாக நினைக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைக்காக வாக்களித்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 9 மணி வரை 10.10 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தனது வாக்கினை பதிவு செய்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கில் யார் வென்றாலும் பணநாயகம்தான் வென்றது என்று நினைத்துக்கொள்ள வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முறையாகவே நடக்கவில்லை. முதலில் மக்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வர வேண்டும் என்றார்.