ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல உள்ள இயந்திரங்கள்...!
வாக்குப்பதிவு இயந்தியரம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
வாக்குப்பதிவு இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 9 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைக்காக வாக்களித்து வந்தனர். சுமார் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தியுள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 70.58 % வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் 77,183 ஆண்களும் மற்றும் 83,401 பெண்களும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து வாக்குப்பதிவு நிறைவு செய்யப்பட்டது.
பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல உள்ள இயந்திரங்கள்
வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்,
இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட இருக்கிறது.