வாக்களிக்க காத்திருக்கும் மக்களுக்கு இரவு உணவு வழங்க ஏற்பாடு - ராஜ்குமார் யாதவ் உத்தரவு...!
வாக்களிக்க காத்திருக்கும் மக்களுக்கு இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்ய தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
வாக்குப்பதிவு இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 9 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைக்காக வாக்களித்து வந்தனர்.
சுமார் 2.27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவினை செலுத்தியுள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி 70.58 % வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் 77,183 ஆண்களும் மற்றும் 83,401 பெண்களும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து வாக்குப்பதிவு நிறைவு செய்யப்பட்டது.
உணவு வழங்க ஏற்பாடு
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 மணிக்கு பிறகு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வரும்நிலையில், ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வாக்களிக்க காத்திருக்கும் அனைவருக்கும் இரவு உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
138வது வாக்குச்சாவடியான ராஜாஜிபுரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளதால், அங்கு மட்டும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது என்றார்.