மீண்டும் ஈ பாஸ் கட்டாயம் : தமிழக அரசு அறிவிப்பு

covid tamilnadu epass
By Jon Mar 07, 2021 04:04 PM GMT
Report

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வெளிமாநிலங்கள் வழியாக தமிழகம் வருவோருக்கும் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

மீண்டும் ஈ பாஸ் கட்டாயம் : தமிழக அரசு அறிவிப்பு | Tamilnadu Epass Covid

மேலும், வணிகரீதியாக தமிழகத்திற்கு 3 நாட்கள் வரை தங்குவோருக்கு தானிமைப்படுத்தலில் இருந்து விலக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.