2-வது நாளாக சத்யபிரத சாகு இன்று ஆலோசனை
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மாலை 5 மணிக்கு இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மாலை 5 மணிக்கு இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (ஏப்.21) அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை நடக்கவுள்ளது.