கன்னியாகுமரியில் பாஜகவினர் சாலை மறியல்
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும்.
மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையில் 98.6 டிகிரி பதிவானால் அனுமதி அளிக்கப்படாது. வாக்கு எண்ணும் அறைகளுக்கு முகவர்கள் செல்ல பிரத்யேகமாக தடுப்பு கட்டைகள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை பார்வையிடவரும் உயர் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அமர்வதற்காக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்பு நுழைவுச் சீட்டில் குறைவான பாதிப்பில்லை என முத்திரை இடப்பட்ட நிலையில்,
கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்று தேவை என அதிகாரிகள் கேட்டதால் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.