திமுக-வை முந்திய தவெக - Live Updates
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் வரும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவு
காலை 10.30 மணி நிலவரப்படி 234 தொகுதிகளில் த.வெ.க. 102, அ.தி.மு.க. கூட்டணி 81, தி.மு.க.கூட்டணி 51 ஆகிய இடங்களில் முன்னிலை
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார்.
காலை 9 மணி நிலவரம்:
தி.மு.க. - 47
த.வெ.க. - 41
அ.தி.மு.க. - 35
நா.த.க. - 0
விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆய்வாளர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் சுந்தர்.சி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை
மதுரை மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை, அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு பின்னடைவு
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு
தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில் திமுக 10, அதிமுக 3, தவெக 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன, கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த தேர்தலில் 4.87 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது.
திமுக- அதிமுக- நாதக- தவெக என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் முதலமைச்சர் அரியணையில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் திமுகவும், ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும், விஜய் தலைமையிலான தவெகவும், சீமான் தலைமையில் நாதகவும் களம் கண்டுள்ளன.
இளைஞர்கள், பெண்கள் மத்தியில் தவெகவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததால் இந்த தேர்தல் முந்தைய தேர்தலை விட மாறுபட்டு நிற்கிறது.