தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரம் : காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

Election tamilnadu Police parade
By Nandhini Sep 30, 2021 05:30 AM GMT
Report

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்பட்டு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வந்துக் கொண்டிருக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் நடைபெற இருக்கின்றன.

வாக்குப்பதிவு நாள் அன்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் 40 ஆயிரம் போலீசாரும், ஊர்காவல் படையினரும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். நடமாடும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பரப்புரை வரும் 4ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைவதால் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.