தமிழ்நாட்டில் 7,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் வந்து சென்றார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான முன் ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது; இதன் ஒரு பகுதியாக சட்டசபை தேர்தல் தொடர்பாக கடலூரில் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது.
கடலூரில் 178 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் எப்போதும் போல் சிறப்பானதாகவே இருக்கும். தமிழகத்தில் 21 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு சத்யபிரதா சாஹூ கூறினார்.