தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 (6,26,74,446) வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்திலேயே 6,94, 845 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், 1,76,272 வாக்காளர்களுடன் துறைமுகம் தொகுதி குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்டதாகவும் உள்ளது.