தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை முடிவுசெய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு கட்சிக்கு 3 இடங்களும், அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சிக்கு 1 இடமும், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 இடமும் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.
தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சற்றுநேரத்தில்அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார்.
இவருக்கு நெய்வேலி அல்லது பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஆதி தமிழர் பேரவைக்கு ஒரு இடம் ஒதுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.