“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும்” - மாநில தேர்தல் ஆணையம்
election commission
tamil nadu
madras high court
By Swetha Subash
ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையர் தகவலளித்துள்ளார்.
கொரோனா பரவல் உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் வரும் திங்கள்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.