தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறுகிறதா?

admk bjp ntk mnm
By Jon Feb 17, 2021 07:33 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மே மாதம் 3-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வுகள் 3 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரங்களைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றன.

தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகைபுரிந்து மாநில முன்னணி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்தார். நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாக சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 24-ம் தேதி அதிமுக ஆட்சிக் காலம் முடிவடையவுள்ளதால், அதற்கு முன்பாக புதிய சட்டப் பேரவை அமைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.