மக்களிடம் கை கூப்பு மன்னிப்பு கேட்ட விஜய் - நடந்தது என்ன?
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்த வந்துக்கொண்டிருந்தார். அப்போது நடிகர் விஜய் விஜய் வருவதைப் பார்த்து மக்களும், பத்திரிகையாளர்களும் அந்த இடத்தில் சூழ்ந்தனர்.
வாக்களித்து வெளியே வரும்போது, வாக்குச்சாவடியில் வாக்களிக்க மக்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தனர். நடிகர் விஜய் வந்ததால் அங்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள், போலீசார் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மக்கள் மீது மோதினர். அப்போது, நடிகர் விஜய் மக்களிடம் இடையூறுக்கு மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாம் வாக்களிக்க வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக மன்னிப்பு கோரிய நடிகர் @actorvijay pic.twitter.com/AFVJ3kOaLb
— Mathiyazhagan Arumugam (@Mathireporter) February 19, 2022