மாவட்ட கவுன்சிலர்கள் – திமுக தொடர்ந்து முன்னிலை - அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி!
9 மாவட்டங்களிலும் 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 139 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. 140 கவுன்சிலர் இடங்களில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழக முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது அக்.6 மற்றும் அக்.9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இந்நிலையில், இத்தேர்தல் நிறைவுற்ற நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனையடுத்து, 9 மாவட்டங்களிலும் 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 139 இடங்களில் வெற்றி அடைந்து முன்னிலை வகிக்கிறது. 140 கவுன்சிலர் இடங்களில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி, காட்டாங்குளத்தூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் கஜேந்திரன் என்பவர் வெற்றி அடைந்துள்ளார்.
