சூடு பிடிக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை - நிலவரம் இதோ
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதிவில் இடங்களில் தொடர்ந்து திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
அந்த வகையில், மொத்தம் 140 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் 5, செங்கல்பட்டு 8, வேலூர் 6, ராணிப்பேட்டை 5, திருப்பத்தூர் 5, விழுப்புரம் 5, கள்ளக்குறிச்சி 3, நெல்லை 4 மற்றும் தென்காசியில் 4 ஆகிய இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
இதுபோன்று, 1381 ஒன்றிய கவுன்சிலர் பதிவு இடங்களில் திமுக கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காஞ்சிபுரம் 23, செங்கல்பட்டு 4, வேலூர் 10, ராணிப்பேட்டை 5, திருப்பத்தூர் 4, விழுப்புரம் 13, கள்ளக்குறிச்சி 4, நெல்லை 3 மற்றும் தென்காசியில் 2 ஆகிய இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுக 2 மற்றும் மற்றவை 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan
