ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 5 இடங்களில் திமுக முன்னிலை!
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என 2 கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், 2ம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கி இருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் 31 ஆயிரத்து 245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிக்கிறார்கள். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27 ஆயிரத்து 003 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 19 மாவட்ட கவுன்சிலர்களை கொண்ட கள்ளக்குறிச்சியில் 2 இடங்களில் திமுக முன்னிலை வகித்த நிலையில் 5 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பெற்று அதிலும் திமுகவே முன்னிலை வகித்து வருகிறது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அரங்கேறிய கொடூரம் - கொன்றுவிடுவோம் - துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் IBC Tamil