ஊழலுக்கு எதிராக யாரும் கிட்ட நெருங்க முடியாத நெருப்பு பிரதமர் மோடி - எடப்பாடி கருத்து
வரும் ஏப்ரல் 2ம் தேதி (சனிக்கிழமை) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
டெல்லியில், இன்று (வியாழக்கிழமை) காலை அவரை டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். இதன் பின்பு, பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், இச்சந்திப்பு குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் டெல்லி பயணத்தில் இருக்கும் மர்மத்தை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் என்னவென்று விளக்குவாரா? ஊழக்கு எதிரான நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி என்பதை திமுகவினர் விரைவில் உணர்ந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.