2வது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி

By Fathima Apr 28, 2026 08:48 AM GMT
Report

தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2025- 26ம் ஆண்டில் 10.83 சதவிகித பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, தனிநபர் வருமானம் 4.08 லட்சமாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வது குறிப்பிடத்தக்கது.