வேலூரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் - மக்கள் பீதி
வேலூர் அருகே மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள். நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும். இதனால், தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைத்தான் நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த அதிர்வு நிலநடுக்கமாக இருக்கும் பட்சத்தில் ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகின்றன. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.
இந்நிலையில், வேலூரில் அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பு இருக்காது என்று தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்திருக்கிறது.
நில அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வேலூரிலிருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 59 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நில அதிர்வு உண்டாகி இருக்கிறது.
வேலூரில் அதிகாலை நிலஅதிர்வு காரணமாக மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலையில் ஒன்று கூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.