இ-பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் - தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவை தடுக்கும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்தது. முழு ஊரடங்கை மக்கள் முறையாக கடைப்பிடிக்கும் வகையில், இ-பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
அதன் படி, தற்போது மாவட்டத்திற்குள்ளும், வெளிமாநிலங்களுக்குச் செல்லவும் மக்கள் இ–பதிவு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மூன்று வகையான காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது.
மருத்துவம், முதியோர் பராமரிப்பு மற்றும் துக்க நிகழ்வுகளுக்காக இ–பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. கணினி புலைமை வாய்ந்தவர்களால் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும். சாதாரண மக்களால் இந்த இ-பதிவு முறையை பயன்படுத்த முடியாது.இது போன்ற பல நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகள் இ-பதிவு முறையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதனை சரிசெய்வதற்காக, இ-பதிவு குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், கட்டணம் எதுவும் செலுத்தாமல் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொண்டு மக்கள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.