முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மாநில வளர்ச்சி கொள்கை குழு முக்கிய ஆலோசன
DMK
Tamil Nadu
Stalin
By mohanelango
தமிழ்நாடு திட்டக்குழுவை மாநில வளர்ச்சி கொள்கை குழு என தமிழக அரசு பெயர் மாற்றம் செய்திருந்தது. இந்தக் குழுவுக்கான புதிய உறுப்பினர்களையும் நியமித்திருந்தது.
அதன் தலைவராக பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பேராசிரியர் ஜெயராஜன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, மருத்துவர் சிவராமன், நர்த்தங்கி நடராஜன் உள்ளிட்ட பலரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
புதிய உறுப்பினர்கள் சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து முக்கியமான ஆலோசனை நடத்தினர்.