பள்ளி அருகே மர்மமான முறையில் தீயில் கருகி சிறுமி மரணம் – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரில் 5-ஆம் வகுப்பு சிறுமி பள்ளி அருகே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.
பள்ளி அருகே தீயில் கருகி மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமி வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரின் 9 வயது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி, அதன்பிறகு காணவில்லை.
இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுமி கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பள்ளி வளாகத்திலேயே உடல் எறிந்த நிலையில், அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது, சிறுமி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை தமிழக டிஜிபி சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.