தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியது

covid19 thousand tamilnadu impact
By Jon Apr 11, 2021 01:09 PM GMT
Report

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு மீண்டும் இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு, தமிழகத்தில் இன்று 5,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 26 ஆயிரத்து 816- ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,977- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து இன்று 1,952-பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆகும். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,886- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய 84,546- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.