தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3000த்தை நெருங்குகிறது

covid people tamilnadu daily
By Jon Mar 30, 2021 02:43 AM GMT
Report

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3000த்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சுகாதார அமைச்சகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,81,752 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,684 ஆக உயர்ந்து உள்ளது. 13,983 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1352 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8,55,085 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 815 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.