ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்
tamilnadu
cyclone
By Anupriyamkumaresan
டிச.1ஆம் தேதி அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அரபிக் கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாவது குறிப்பிடத்தக்கது.