பவானிசாகர் அணையிலிருந்து 8,000 கன அடி நீர் திறப்பு
tamilnadu
bavanisagar dam
By Anupriyamkumaresan
தமிழகத்தில் தொடரும் கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் 103.72 அடியை எட்டியுள்ளது.
பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு ஆறாயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழ் பவானி வாய்க்காலில் ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.